|
திருக்கோஷ்டியூர் செüமிய நாராயணப் பெருமாள் கோயில் மாசித் தெப்பத் திருவிழா Feb 19, 10 |
|
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் செüமிய நாராயணப் பெருமாள் கோயில் மாசித் தெப்பத் திருவிழா வரும் 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்குக் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இரவு தங்கப்பல்லக்கில் உற்சவர் திருவீதி உலா நடைபெறும். தினமும் சுவாமி சிம்மம், அனுமந்த, கருட, ஷேஷ வாகனங்களில் வீதி உலா வருவார். ஆறாவது நாள் ஆண்டாள் சன்னிதியில் மாலை மாற்றும் விழா நடைபெறும். மறுநாள் உற்சவருக்கு மஞ்சள் காப்பு அணிவிக்கப்படும். பிறகு தங்கப்பல்லக்கில் பவனி வருவார்.
வரும் 27-ம் தேதி, வெண்ணெய் தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் காலை முதல் இரவு வரை அருள்பாலிப்பார். காலை 11 மணிக்கு முட்டுத்தள்ளல், மறுநாள் 28-ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.
பெருமாள் சீதேவி, பூதேவியருடன் தங்கப் பல்லக்கில் கோயில் குளக்கரை மண்டபத்தில் எழுந்தருள்வார். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தெப்ப உற்சவம் நடைபெறும்.
மறுநாள் தீர்த்தவாரியை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம் நடக்கும். இரவு 9 மணிக்கு சுவாமி கோயில் ஆஸ்தானம் சென்றடைவார்.
source ;Dinamani |
|
|
|
|
|