|
பழநி பாதயாத்திரை பக்தர்கள் சென்ற ரோட்டில் அறுந்து விழுந்த மின்கம்பி Jan 16, 15 |
|
செம்பட்டி - பழநி ரோட்டில் உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென் மாவட்டங்களில் இருந்து பழநிக்கு ஆயிரக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள் செம்பட்டி வழியாக செல்கின்றனர். செம்பட்டி -பழநி ரோட்டில் துணைமின் நிலையம் உள்ளது. இங்கிருந்து 23 ஆயிரம் வோல்ட் மின்சாரத்தை கடத்தும் மின்கம்பிகள் செல்கின்றன.நேற்று மாலை ஐந்து மணியளவில், இந்த ரோட்டில் உயர்அழுத்த மின்கம்பி ஒன்று திடீரென அறுந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பாதயாத்திரை சென்ற பக்தர்கள், வாகனங்கள் இல்லாத இடத்தில் விழுந்ததால் உயிர்ப்பலி, சேதம் தவிர்க்கப்பட்டது. கம்பி அறுந்து விழுந்ததை கண்டவர்கள் உடனடியாக போக்குவரத்தை தடை செய்தனர். துணைமின் நிலையம் மற்றும் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மின்சப்ளை நிறுத்தப்பட்டு கீழே விழுந்த மின்கம்பி உடனடியாக அகற்றப்பட்டது.
முறையான பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாததால்தான் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது.
விபத்துகளை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பான முறையில் மின்வழித்தடத்தை அமைப்பதற்கு மாவட்ட மின்வாரிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். |
|
|
|
|
|