Nagaratharonline.com
 
ஒபாமாவுக்காக காத்திருக்கும் நம்ம ஊரு ‘செட்டிநாடு சிக்கன்’!  Jan 25, 15
 
இந்தியாவின் 66வது குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக மனைவியுடன் இந்தியா வந்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. விமானம் வாயிலாக டெல்லி வந்திறங்கிய ஒபாமா, இரவு ஜனாதிபதி மாளிகை விருந்தில் கலந்து கொள்கிறார்.

விருந்தில் பரிமாறப்பட உள்ள உணவு வகைகள்:
*சிம்லாவில் இருந்து வரவழைக்கப்பட்ட, 'டிரவுட்' மீன் பொரியல். *வெல்லத்தால் செய்யப்பட்ட, 'சந்தேஷ்' எனப்படும் பெங்காலி இனிப்பு. *மோர்க்குழம்பு போன்ற, 'கடி' எனப்படும் குஜராத்தி வகை சைடு டிஷ். * புகழ்பெற்ற தமிழகத்தின், 'செட்டிநாடு சிக்கன்' வகைகள். *அலகாபாத் ஸ்டைல், 'கெபாப்' இறைச்சி. *கோவா கறிக்குழம்பு.