|
திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் கும்பாபிஷேகம் Jan 27, 15 |
|
திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் பட்டினத்தார் கோயில் அமைந்துள்ளது. பழைமையான இந்தக் கோயில் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில், இந்தக் கோயிலைச் சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு ரூ.1.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து, கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற பணிகள் நிறைவடைந்த நிலையில், கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது.
இதன்படி, கடந்த வெள்ளிகிழமை விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின. முதல்கால யாக சாலை பூஜையை தொடர்ந்து, திங்கள்கிழமை காலை 5 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.
பின்னர் மஹா பூர்ணம், கடங்கள் புறப்பாடு, விமான மஹா கும்பாபிஷேகம், பட்டினத்தார் மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. |
|
|
|
|
|