Nagaratharonline.com
 
தாளிச்சாவூரணியில் கற்பகமுத்து விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்  Feb 12, 15
 
தாளிச்சாவூரணியில் கற்பகமுத்து விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுப்பிரமணியர், கஜலட்சுமி, ஐயப்பன், நவக்கிரகங்களுக்கு சன்னதி உள்ளது.
பல ஆண்டுகளுக்கு திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. சந்திரசேகர குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள் நான்கு காலயாக பூஜை நடத்தினர். நேற்று காலை பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள், கும்பங்களில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், ராமேஸ்வரம் கோயில் அறங்காவலர் சோமநாராயணன் பங்கேற்றனர்.