|
அரளிக்கோட்டை- வேலங்குடி கருப்பர் கோவில் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை Feb 22, 15 |
|
திருப்பத்தூர் அருகே உள்ளது அரளிக்கோட்டை. இங்கு 150 குடும்பங்களுக்கு சொந்தமான வேலங்குடி கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கருப்பர் சாமிக்கு அணிவிக்கும் தங்க ககுக்கனண், பூனூல், காப்பு, தண்டை என 5 பவுன் நகைகள் உள்ளன. இவையனைத்தும் கோவிலிலேயே வைக்கப்பட்டு இருந்தன.
நேற்று இரவு கோவிலின் மரக்கதவை உடைத்த யாரோ உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த 5 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இது குறித்த கோவில் நிர்வாகத்தினர், போலீசில் புகார் செய்தனர். திருக்கோஷ்டியூர் இன்ஸ்பெக்டர் மதிவாணன் வழக்குப்பதிவு செய்து கோவிலில் புகுந்து கொள்ளையடித்த ‘மர்ம’ மனிதர்களை தேடி வருகிறார். |
|
|
|
|
|