Nagaratharonline.com
 
ஆ.தெக்கூரில் S V கலாசாலை பள்ளியில் மாணவர்களை துணை நடிகர்களாக ஆக்கி சினிமா ஷூட்டிங்  Feb 25, 15
 
ஆ தெக்கூரில் எஸ்.வி.கலாசாலை பள்ளி உள்ளது. விக்ரம் பிரபு நடிக்கும் 'வாகா' படத்திற்கான படப்பிடிப்பு, நேற்று காலை இப் பள்ளி வளாகத்தில் நடந்தது. மதிதேர்வு எழுத வந்த பிளஸ் 1 பள்ளி மாணவர்களை துணைநடிகர்கள் சிலருடன் சீருடையில் உறுதிமொழி ஏற்கும் காட்சி படமாக்கப்பட்டது. நேற்று பிளஸ்1 ரிவிஷன் தேர்வு, 10ம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வு நடக்கும் நிலையில், பள்ளி வளாகத்தினுள் படப்பிடிப்பு நடத்த அனுமதித்தது, அதில் மாணவர்களை பங்கேற்க செய்தது பெற்றோரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிரியர்களும், பிற மாணவர்களும் தேர்வுக்கு படிக்க முடியாமலும், வகுப்பில் கவனம் செலுத்த முடியாமலும் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தனர். இன்றும் இப்பள்ளியில் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க உள்ளது.

தலைமையாசிரியர் அசோகன் கூறுகையில், 'இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவரான காவல்துறை அதிகாரி விஜயக்குமார், போன்றவர்கள் படித்த காலத்தை நினைவூட்டும் காட்சி படமாக்கப்படும் என்றதன் பேரில் அனுமதி அளிக்கப்பட்டது. மாணவர்கள் யாரும் நடிக்கவில்லை. மைதானத்தில் தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. மாணவர்கள் கல்வியில் முழுக்கவனம் செலுத்தப்படுகிறது. வழக்கம் போல வகுப்புகள் நடந்தன. மாலையில் தேர்வும் நடந்தது.' என்றார்.