Nagaratharonline.com
 
ராங்கியம்மெட்டில் பொதுமக்கள் மறியல்  Feb 20, 10
 
புதுக்கோட்டை மாவட்டம்,​​ பனையப்பட்டி அருகேயுள்ள ராங்கியம்மெட்டில் மதுக்கடையை ​(கடை எண்-​ 6729) மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை திடீர் சாலை ​ மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

​ ​ ​ ​ ​ ராங்கியம்மெட்டில் உள்ள இந்தக் கடையை மூட வலியறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

​ ​ ​ ​ ​ இந்நிலையில்,​​ அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் வெள்ளிக்கிழமை காலை சுமார் 10 மணியளவில் கடையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

​ ​ ​ ​ ​ ​ இதுகுறித்து தகவல் அறிந்த பனையப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கம்,​​ டாஸ்மாக் மேலாளர் பாலசந்திரன்,​​ திருமயம் வட்டாட்சியர் ஜெயசண்முகம்,​​ ராங்கியம் ஊராட்சித் தலைவர் ராமு,​​ மிதிலைப்பட்டி ஊராட்சித் தலைவர் பழனியப்பன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.​ ஆனால்,​​ தங்கள் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுக்காதவரை போராட்டத்தைக் கைவிட முடியாது என்று பொதுமக்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.

​ ​ ​ ​ ​ இதைத் தொடர்ந்து,​​ அந்த மதுக்கடையைப் பூட்டிவிட நிர்வாகம் தீர்மானித்து,​​ அனைவரின் முன்னிலையிலும் கடை பூட்டப்பட்டது.​ இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.​ இதனால்,​​ புதுக்கோட்டை-திருமயம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.​ ​

source : Dinamani