|
கீழச்சிவல்பட்டி, நெற்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பற்றாக்குறை Mar 1, 15 |
|
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதியசெவிலியர் இல்லாததால் பணிகள் பாதிக்கப்படுகிறது.
கீழச்சிவல்பட்டி அ.ஆ.சு.நிலையத்தில் 3 செவிலியருக்கு ஒருவர் மட்டுமே உள்ளார். நெற்குப்பையில் 5 பேருக்கு இருவர் மட்டுமே உள்ளனர். திருக்கோஷ்டியூரில் 3 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.சுமார் 6 மாதங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனைக்கு பதவி உயர்வில் செவிலியர்கள் சென்றதால், புதிய செவிலியர்கள் நியமிக்கப்படடவில்லை. இரவில் நோயாளிகளுக்கு முதலுதவி அளிப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. காலியாக உள்ள செவிலியர் பணியிடத்தை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் |
|
|
|
|
|