Nagaratharonline.com
 
திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா: போக்குவரத்து மாற்றம்  Mar 3, 15
 
திருக்கோஷ்டியூர் ஸ்ரீ செளமிய நாராயணப் பெருமாள் கோயில் மாசி மகம் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, போக்குவரத்தில்
புதன்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஷ்வின் முகுந்த் கோட்னீஸ் கூறியிருப்பதாவது:

சிவகங்கையிலிருந்து வரும் பக்தர்கள் வாகனங்கள் மட்டும் மதகுபட்டி வழியாக திருக்கோஷ்டியூர் செல்ல
அனுமதிக்கப்படும். திருப்பத்தூரிலிருந்து வரும் வாகனங்கள் திருக்கோஷ்டியூர் தானிப்பட்டி விலக்கு வழியாகச் செல்லவேண்டும்.

சிவகங்கையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வாகனங்கள் மதகுபட்டி, கருவேல்குறிச்சி, அண்ணாநகர், கருங்குளம், பட்டமங்கலம் வழியாகச் செல்லவேண்டும். திருப்பத்தூரிலிருந்து
சிவகங்கை செல்லும் வாகனங்கள் கண்டரமாணிக்கம், பட்டமங்கலம், சொக்கநாதபுரம், மதகுபட்டி வழியாகச் செல்ல வேண்டும்.

காரைக்குடியிலிருந்து வரும் வாகனங்கள் கண்டரமாணிக்கம், பட்டமங்கலம், திருப்பத்தூர் வழியாக திருக்கோஷ்டியூர் செல்லவேண்டும.

உள்ளூர் மற்றும் வெளியூர் ஆட்டோக்கள் திருக்கோஷ்டியூர் ஊருக்குள் மார்ச் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை ஓட்ட அனுமதி இல்லை.