|
இணையதளத்தில் சொத்து வரியை செலுத்த கூடுதல் கட்டணம் ரத்து Mar 5, 15 |
|
சென்னை மாநகராட்சி சொத்து வரியை இணையதளம் மூலம் செலுத்துவதற்காக வசூலிக்கப்பட்டு வந்த கூடுதல் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை இணையதளம் மூலம் இணையதள வங்கி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்தி செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை சொத்துவரியை இணையதளம் மூலம் செலுத்த கட்டணம் (transaction fees) வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணம் வங்கிக்குப் போய் சேரும்.
இணையதளம் மூலம் வரி செலுத்தும் வசதியைப் பயன்படுத்த பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில் இணையதளம் மூலம் கூடுதல் கட்டணம் இல்லாமல் செலுத்த ஐசிஐசிஐ வங்கியுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மாநகராட்சியின் இணைய முகவரியான www.chennaicorporation.gov.in -இல் செலுத்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. |
|
|
|
|
|