Nagaratharonline.com
 
காரைக்குடியில் சமையல் கியாசை கசியவிட்டு இளம்பெண் தீக்குளித்து சாவு  Mar 6, 15
 
காரைக்குடி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 76). இவரது மகள் வள்ளிக்கண்ணு (39). இவருக்கும் ராமசாமி என்பவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் 1½ வருடத்திற்கு முன்னர் ஒரு சாலை விபத்தில் ராமசாமி இறந்து விட்டார். அதன் பின்னர் தந்தையுடன் இருந்த வள்ளிக்கண்ணு வாழ்கையில் விரக்தியுடன் இருந்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் தனது தந்தை உடல் நலக்குறைவால் எடுத்துக்கொண்ட மாத்திரைகள் அனைத்தையும் எடுத்து விழுங்கி உள்ளார். பின்னர் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரின் டியூப்பினை பிடுங்கியதும், கியாஸ் வெளியேறிய போது தனது உடலிலும் தீ வைத்துக்கொண்டுள்ளார்.

இதனால் தீப்பிடித்து அவர் உடல் முழுவதும் பற்றி எரிந்துள்ளது. அப்போது கியாஸ் சிலிண்டர் காலியாகி விட்டதால் தீயின் தாக்கம் குறைந்துள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது தந்தை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

பின்னர் அவர் அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.