|
மருந்து கடைகளில் பன்றி காய்ச்சல் மாத்திரை விற்பனை: 10 கேப்சூல் ரூ.500க்கு கிடைக்கும் Mar 11, 15 |
|
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு எளிதில் பரவக்கூடிய பன்றி காய்ச்சலுக்கு ‘‘டாபி புளு’’ என்ற தடுப்பு மாத்திரை உள்ளன. இந்த மாத்திரையை தொடர்ந்து 10 நாட்களுக்கு சாப்பிட்டால் பூரண குணமடையலாம்.
பன்றி காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் பயப்பட தேவையில்லை. டாக்டரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
சென்னையில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்கள்.மேலும் பன்றி காய்ச்சலலை குணப்படுத்தும் ‘டாமி புளு’ மாத்திரை அரசு மருத்துவமனைகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் எளிதாக கிடைக்க பொது சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 616 தனியார் மருத்துவமனைகள், மருந்து கடைகளில் இந்த மாத்திரை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்கனர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:–
பன்றி காய்ச்சல் மாத்திரைகள் கிடைக்காத ஒன்றல்ல. போதுமான அளவிற்கு இருப்பு உள்ளது. தனியார் மருத்துவமனைகள், மருந்து கடைகளில் பொது மக்கள் எளிதாக பெற வேண்டும் என்பதற்காக ‘டாமி புளு’ மாத்திரை 616 மருந்து கடைகளில் தற்போது விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
10 மாத்திரைகள் கொண்ட அட்டையின் விலை ரூ.500 ஆகும். அந்த விலையை விட கூடுதலாக விற்க கூடாது. பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் டாக்டரின் ஆலோசனைப்படி இந்த ‘கேப்சூலை’ வாங்கி உட்கொள்ள வேண்டும்.
டாக்டரின் மருந்து சீட்டு இருந்தால் மட்டுமே மருந்து கடைகளில் டாமி புளு கேப்சூல் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். |
|
|
|
|
|