|
நெற்குப்பையில் இலவச மருத்துவ முகாம் Mar 13, 15 |
|
நெற்குப்பை பேரூராட்சியில் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு புதன்கிழமை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
துணை மருத்துவ சுகாதார மையத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
முகாமில் டாக்டர் மா.பிரியதர்சினி, மு.அருண்குமார், அ.அஷிஷா, அ.ரபீக்ராஜா, சுகன்யாதேவி, ஆகியோர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். |
|
|
|
|
|