Nagaratharonline.com
 
நெற்குப்பை அரசு கால்நடை மருத்துவமனையை திறக்க கோரிக்கை  Mar 15, 15
 
நெற்குப்பை பேரூராட்சியில் பூட்டிக் கிடக்கும் அரசு கால்நடை மருத்துவமனையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெற்குப்பை பேரூராட்சிக்குள்பட்ட புரந்தன்பட்டி, வடுகபட்டி, பரியாமருதுபட்டி, இடையன்பட்டி, பொட்டவயல் களம், மேலத்தோப்பு, நவனிக்களம் போன்ற பகுதிகளில் வாழ்பவர்கள் பசு, செம்மறி ஆடு வளர்ப்பிலும், பால் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்டிருந்தாலும், ஆடு வளர்ப்பதை துணைத் தொழிலாக வைத்துள்ளனர்.

எனவே தங்களது கால்நடைகளை நோயிலிருந்து காப்பாற்ற நெற்குப்பை பேரூராட்சி அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் கால்நடை கிளை மருத்துவமனையையே நம்பி உள்ளனர். ஆனால் சமீப காலமாக இம்மருத்துவமனைக்கு வாரம் 2 நாள் என்ற முறையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாராந்திர பகுதி நேர பணியாக மருத்துவர்கள் வந்து சென்றனர். தற்போது அவர்களும் வராத காரணத்தால் மருத்துவமனை பூட்டிக் கிடக்கிறது.

இதனால் கால்நடைகளை வளர்ப்போர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து புரந்தன்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் கூறுகையில், மாடுகளுக்கு சினை ஊசி போடாமலும், நோய்க்கான சிகிச்சை அளிக்க முடியாமலும் இருக்கிறோம். அதிக செலவில் தனியார் மருத்துவரை வைத்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். மேலும் அவசரக் காலங்களில் தொலைபேசியில் மருத்துவரை தொடர்பு கொண்டு அவரது வருகைக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே இப்பிரச்னையில் கால்நடைத்துறை கவனம் செலுத்தி இப்பகுதியில் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனை கட்டித்தர முன்வர வேண்டும் என்றார்.

பேரூராட்சித் தலைவர் சஞ்சீவி கூறுகையில், இப்பிரச்னை குறித்து நாங்களும் கால்நடை உயரதிகாரிகளுக்கு கடிதம் மூலமும் தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டதில் எந்த பயனும் இல்லை. தற்போது கால்நடைகளுக்கு அரசு சாரா மருத்துவர் சிகிச்சை அளித்து வருகிறார். எனவே இம்மருத்துவமனையை சீரமைத்து நிரந்தரமாக மருத்துவர்களை பணியில் அமர்த்தினால் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

இதுகுறித்து கால்நடை ஆய்வாளர் தங்கராஜிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, எங்களுக்கு காட்டாம்பூர் கிராமத்தில் 3 நாளும், திருக்களாப்பட்டி, தெக்கூரில் ஒரு நாளும், நெற்குப்பை பகுதியில் 2 நாள்களும் வேலை என குறிப்பிட்டுள்ளனர். எனவே முழு நேர பணியில் அங்கு இருக்க முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் தற்போது அரசு அறிவித்துள்ள 6 மாதத்துக்கு ஒருமுறை கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணியையும் மேற்கொள்வதால் பணிச்சுமை காரணமாக வர இயலாத நிலை உள்ளது என்றா