|
இலுப்பக்குடியில் சூரியக்கதிர்கள் வழிபாடு Mar 18, 15 |
|
இலுப்பக்குடியில் உள்ள வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோயில் மூலஸ்தானத்தில் சூரியக்கதிர்கள் வழிபாடு புதன்கிழமை தொடங்கியது.
சிவகங்கையில் இருந்து படமாத்தூர் செல்லும் சாலையில் உள்ளது இலுப்பக்குடி கிராமம். இங்கு வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோயிலை குலதெய்வமாக வணங்குபவர்கள் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். ஆண்டு தோறும் மார்ச் 8 முதல் 20 ஆம் தேதி வரை மற்றும் செப். 17 முதல் 29 ஆம் தேதி வரை அதிகாலை சூரிய உதயத்திலிருந்து சுமார் அரை மணி நேரம் மூலஸ்தானத்தில் உள்ள வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி மீது சூரிய ஒளி கதிர்கள் விழுகின்றன. இந்த நிகழ்வை கண்டு தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். வெள்ளிக்கிழமை வரை சூரியக்கதிர் வழிபாட்டை பக்தர்கள் கண்டுதரிசிக்கலாம். |
|
|
|
|
|