|
நெற்குப்பை : மூதாட்டியிடம் செயின் பறிப்பு Feb 24, 10 |
|
நெற்குப்பை, நவனிக்களத்தை சேர்ந்த சந்திரசேகரன் மனைவி லெட்சுமி(60). இவர், கடந்த 23ம் தேதி மாலை 5 மணிக்கு தோட்டத்து வேலை முடித்து நெற்குப்பை - மகிபாலன்பட்டி ரோட்டில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். இவரை பின் தொடர்ந்து டூவீலரில் வந்த மர்ம நபர்கள், அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க நகையை வழிப்பறி செய்து தப்பினர். நெற்குப்பை போலீசார் விசாரிக்கின்றனர்
source : Dinamalar |
|
|
|
|
|