|
பராமரிப்பு பெயரில் பாசஞ்சர் ரயில்கள் நிறுத்தம்; பயணிகள் அவதி Mar 30, 15 |
|
திருச்சியிலிருந்து காரைக்குடி வழியாக விருதுநகர் மன்னார் குடியிலிருந்து - மானாமதுரைக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் இந்த ரயில்கள் பராமரிப்பு பணி என்ற பெயரில் இயக்கப் படாததால் பயணிகள் அவதிக் குள்ளாகின்றனர்.திருச்சியிலிருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காரைக் குடிக்கு 6 மணிக்கு வந்து, விருதுநகருக்கு இரவு 9.30 மணிக்கு சேரும், ரயில் எண்: 768339, 76837 சனிக்கிழமை இயக்கப்படுவதில்லை. இதனால் விருதுநகரிலிருந்து, காரைக்குடி, திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படுவதில்லை.
திருச்சியிலிருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, காரைக் குடிக்கு இரவு 8.30 மணிக்கு வந்து சேரும் ரயில் (எண்:76831) சனிக்கிழமை இயக்கப்படுவ தில்லை. இதனால், ஞாயிற்றுக் கிழமை காரைக்குடியிலிருந்து - திருச்சிக்கு இந்த ரயில் (76830) இயக்கப்படுவதில்லை. மன்னார்குடியிலிருந்து - மானா மதுரை, மானாமதுரையிலிருந்து - மன்னார்குடி வரை இயக்கப்படும் ரயில் ஞாயிற்றுக்கிழமை இயக்கப் படுவதில்லை. ஆரம்ப கட்டத்தில் பராமரிப்பு பணி என விடுமுறை நாட்களில் நிறுத்தப்பட்ட இந்த ரயில்கள், தற்போது பராமரிப்பு பணி என்ற நிலையிலே பல மாதங்களாக நிறுத்தப்பட்டு வருகிறது.
காரைக்குடி கணேசபுரம் கார்த்திக் கூறும்போது: விடுமுறை நாட்களில் தான் பெரும்பாலான முகூர்த்தங்கள் வருகிறது. இவர்களுக்கு வசதியாக மானா மதுரை வரை ரயில்கள் இருந்தன. தற்போது வார விடுமுறை நாட்களில் இவை இயக்கப் படாததால், பஸ்சில் சிவகங்கையை சுற்றி, மானா மதுரை செல்ல வேண்டியதுள்ளது. திருச்சிக்கு செல்வோரும் இந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளதால் அவதிக் குள்ளாகி வருகின்றனர். மாவட்ட எம்.பி., புதிய ரயில் விட நடவடிக்கை எடுக்காவிட்டாலும் பரவாயில்லை. இருக்கின்ற ரயில்களை நிறுத்தாமல் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கலாமே, என்றார். |
|
|
|
|
|