|
செட்டிநாடு கட்டடக்கலை நுணுக்கம்: கேரள மாணவர்கள் பிரமிப்பு !! Apr 22, 15 |
|
கேரளாவிலிருந்து 2 பேருந்துகளில் தேசிய தொழில்நுட்பக்கழக கட்டடவியல்துறை பேராசியர் டாக்டர் பி.பி. அனில்குமார் தலைமையில், பேராசிரியர்கள் கே. சித்ரா, சந்தீப், பிரியங்கா, ஜோதி, அனு ஆகியோர் கொண்ட குழுவினருடன் 90 மாணவ, மாணவியர் சனிக்கிழமை காரைக்குடிப் பகுதியில் உள்ள செட்டிநாடு கட்டடக் கலையை பார்வையிட வந்தனர்.
ஆத்தங்குடி, கானாடுகாத்தானில் உள்ள செட்டிநாடு வீடுகளை பார்வையிட்ட பின்னர் காரைக்குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல்கள் வீட்டை பார்வையிட்டனர். அவர்களுக்கு ஆசிரியர் வி.சுந்தரராமன், ஆயிரம் ஜன்னல்கள் வீட்டின் கட்டடக் கலையை விளக்கினார்.
பின்னர், மாணவ, மாணவியர் கூறுகையில், இங்குள்ள கட்டடங்களை பார்க்கும் போது மிகவும் வியப்பாக உள்ளது. அதிலும் முட்டை, சுண்ணாம்பு கலந்த சுவர்ப் பூச்சு அதன் தன்மை மாறாமலும், பளபளப்புடன் இருப்பது ஆச்சரியமானது. இங்குள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள் மிகவும் கவர்ந்துள்ளது. வண்ண விளக்குகள், பூ கல் பதிப்புகள், முற்றம், மழைநீர் வடிகால் போன்றவை சிறப்பாக உள்ளன. உயரமான கட்டட அமைப்பின் உள்ளே குளுமை இதமாக உள்ளது, என்றனர். |
|
|
|
|
|