|
NEWS REPORT: அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளை வாங்க வேண்டாம் Apr 22, 15 |
|
கோவை மாவட்ட ஊரகப் பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெறாமல் விற்பனை செய்யப்படும் வீட்டு மனைகளை வாங்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத மனையிடங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. உள்ளாட்சி நிர்வாகத்தின் உரிய அனுமதியைப் பெறாமல், அனுமதி பெற்ற மனைகள் என்று போலியான விளம்பரங்கள் மூலம் வீட்டு மனைகள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
உள்ளூர் திட்டக் குழுமம், நகர் ஊரமைப்புத் துறை, உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய அனுமதியைப் பெற்ற பிறகே மனைகளை விற்பனை செய்ய வேண்டும்.
அங்கீகாரம் இல்லாத இடங்களில் மனைகளை வாங்கி வீடு கட்டுபவர்களுக்கு, குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியாது.
எனவே பொதுமக்கள் யாரும் அங்கீகரிக்கப்படாத இடங்களில் மனைகளை வாங்கி சிரமப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். |
|
|
|
|
|