Nagaratharonline.com
 
விரைவில் வருகிறது: விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் பான் கார்டு  Apr 22, 15
 
ஆன்-லைன் மூலமாக இணையதளத்தில் விண்ணப்பித்த 48 மணி நேரத்தில், வருமான வரி கணக்கு எண் அட்டையைப் பெறலாம் என்று மூத்த அதிகாரி ஒருவர், செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

அனைவரும் இந்த அட்டையைப் பெறும் வகையில், நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கும், குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமான விலையில் அசையா சொத்துகள், வாகனங்கள் வாங்குவதற்கும் அல்லது விற்பதற்கும், வருமான வரி கணக்கு எண்ணைத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். ரூ.1 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மதிப்புள்ள நகைகளை வாங்கும்போது, வருமானவரி கணக்கு எண்ணைத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.