Nagaratharonline.com
 
NEWS REPORT: பொன்னமராவதி அழகப்பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா  May 3, 15
 
 
பொன்னமராவதி அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகப்பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா, 1/5/2015 அன்று காலை 8. 30 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது .

பக்தர்கள் திரளாக வந்து குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு அழகப்பெருமாள் அருள் பெற்றனர். அன்று மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.. இரவு அழகப்பெருமாள், கருட வாகனத்தில் திருவீதி உலா வந்தார்

கி பி 1228 ல் (பதிமூன்றாம் நூற்றாண்டு) முதலாம் சுந்தர பாண்டிய மன்னரால் கட்டப்பட்டு "சுந்தரராஜப் பெருமாள் கோயில்" என்ற பெயருடன் விளங்கியது. பின்னர் சரியான பராமரிப்பு இல்லாமல் சிறிது சிதைவுற்றிருந்தது. ஒருநாள் புதுப்பட்டி ப. அ அண்ணாமலை செட்டியார் கனவில் பெருமாள் தோன்றி, கோயில் திருப்பணியை தொடங்கி கும்பாபிஷேகம் செய்ய பணித்ததால். அவ்வாறே 95 ஆண்டுகளுக்கு ( கி பி 1920 )முன்பு, ஆலயத்தை அழகுற புதிப்பித்து குடமுழுக்கு விழா நடத்தியதால், அழகப்பெருமாள் கோயில் என பெயர் பெற்று விளங்க துவங்கியது .

1990 - ல், புதுப்பட்டி ப.அ.அண்ணாமலை செட்டியார் பேரர்கள் ப. அ.அழ ராமநாதன் செட்டியார் (பெருமாள்) மற்றும் ப. அ. அழ அண்ணாமலை செட்டியார் ( இளைய பெருமாள்)ஆகியோர் ஆலயத் திருப்பணி செய்து, இரண்டாவது கும்பாபிஷேகம் நடத்தினார்கள் .

மீண்டும் அக்குடும்பத்தாரே ( ப.அ. அ. குடும்பத்தார் ) 1/5/2015 அன்று மூன்றாவது குடமுழுக்கு விழா செய்திருக்கிறாகள்

photo by N.Valliappan.Nachiyapuram