Nagaratharonline.com
 
திருப்பதிக்கு A.C வசதியுடன் புதிய ரயில்  May 28, 15
 
புதுச்சேரி - சென்னை - திருப்பதி மார்கத்தில் டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் ஏசி வசதியுடன் கூடிய ரயில் விரைவில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அசோக் குமார் அகர்வால் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இன்னும் இயக்காமல் இருக்கும் ஒரே ஒரு ரயில் சேவையான புதுச்சேரி - சென்னை - திருப்பதி ரயில் விரைவில் இயக்கப்படும் என்றும், அதனை ரயில்வே அமைச்சர் தொடங்கி வைப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ரயில் சேவை இயக்கப்பட்டால் சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் திருப்பதிக்கு சென்று வருவது எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.