|
NEWS REPORT: நீரிழிவுக்காரர்களுக்கு ஒரு கசப்பான செய்தி May 29, 15 |
|
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதிலாக செயற்கை இனிப்பூட்டியை இனிப்புக்காகப் பயன்படுத்துகிறார்கள்.
சாதாரணமாக நாம் பயன்படுத்தும் சர்க்கரையை விட 200 மடங்கு அதிக இனிப்பு, இந்தச் செயற்கை இனிப்பூட்டியில் இருக்கிறது. ஆனால் கலோரிகள் இல்லை. எனவே, இதனை சாப்பிடும் போது நமது இன்சுலின் அளவு கூடுவதில்லை.
இந்த செயற்கை இனிப்பூட்டிகளில் இந்த அளவுக்கு இனிப்பு அதிகரிக்க அஸ்பார்டேம் என்ற ரசாயனக் கலவையைச் செயற்கை இனிப்பூட்டியில் சேர்க்கிறார்கள்.
செயற்கை இனிப்பூட்டியை அதிகம் பயன்படுத்தினால் மூளைப் புற்றுநோய், பிறவி ஊனம், கை, கால் வலிப்பு போன்றவை வர வாய்ப்பிருக்கிறதாம். எனவே சர்க்கரை வியாதி உள்ளவர்கள் செயற்கை இனிப்பூட்டியை குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்.
"எனக்கு சர்க்கரை நோய் கிடையாது. நான் செயற்கை இனிப்பூட்டியைப் பயன்படுத்தவில்லை. எனவே கவலையில்லை' என்கிறீர்களா? அவசரப்படாதீர்கள். அப்படியும் நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியாது.
ஏன் என்றால், பாட்டில்களில் அடைத்து ஏகப்பட்ட விளம்பரங்களுடன் விற்கப்படும் குளிர்பானங்களில் இந்த அஸ்பார்டேமைத் தான் சேர்க்கிறார்களாம்! |
|
|
|
|
|