Nagaratharonline.com
 
பனையப்பட்டி, ராங்கியம் சாலையில் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை  Jun 21, 15
 
பனையப்பட்டி, ராங்கியம் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பனையப்பட்டி அருகிலுள்ள வீரணாம்பட்டி தூரிகை மன்றச் செயலர் எஸ்.பி. மணிமாறன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, பனையப்பட்டியில் இருந்து ராங்கியம் செல்லும் சாலையில், குழிபிறை சாலை சந்திக்கும் இடத்தில், வீரணாம்பட்டி விளக்கு ரோடு அருகே தொடர்ந்து சாலை விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. குழிபிறையிலிருந்து பனையப்பட்டிக்கு ராங்கியம் சாலையிலும் அதிக அளவிலும் விபத்துகள் நிகழ்கின்றன. ஆகவே இச்சாலையில் இரு இடங்களில் வேகத்தடை அமைத்தும், எச்சரிக்கை பலகை, ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைத்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.