Nagaratharonline.com
 
NEWS REPORT: அஷ்டமியும், நவமியும்..............  Jun 25, 15
 
எந்த ஒரு காரியத்தையும் அஷ்டமி-நவமியில் செய்யக்கூடாது என்கிறார்கள்.

இது ஏன்?

ஜென்மாஷ்டமி (கிருஷ்ணன் பிறப்பு) ஸ்ரீராமநவமி (ராமன் பிறப்பு) ஆகியவை முக்கிய பண்டிகைகளே. எனினும், அவ்விரு அவதாரங்களும், வாழ்வில் படாத பாடுபட்டார்கள்.

ஸ்ரீராமன், துன்பப்பட்டு, விரக்தியடைந்து ஆட்சியைத் தனது குமாரர்களிடம் ஒப்படைத்துவிட்டு, “சரயு’ நதியில் விழுந்து உடலை உகுத்தார்!

கண்ணனோ, விபத்தில் இறந்தான். எனவேதான், அஷ்டமி, நவமி நல்ல நாளல்ல என்று கூறுகிறார்கள்.

மேலும் இது குறித்த கதை ஒன்று…

திருமாலை சந்தித்த அஷ்டமி, நவமி திதிகள், “”எங்களை மட்டும் மக்கள் ஒதுக்கி விடுகின்றனர். நாங்கள் வரும் நாட்களில் மக்கள் கொண்டாட்டங்களை மேற்கொண்டதில்லை. நாங்கள் செய்த பாவம் என்ன?” என்று வருந்திக் கேட்டனர்.

அவர்களுக்கு “”கவலைப் படாதீர்கள். நான் எடுக்கப் போகும் கிருஷ்ணவதாரம் அஷ்டமி திதியிலும், ராமாவதாரம் நவமி திதியிலும் நிகழும்.

அந்த நாட்களை மக்கள் மிகவும் பெரிய விழாவாகக் கொண்டாடுவார்கள்” என ஆறுதல் கூறினார். அதன்படியே நாம் கிருஷ்ணன் பிறந்த அஷ்டமி திதியை கோகுலாஷ்டமி என்றும், ராமர் பிறந்த நவமி திதியை ஸ்ரீராமநவமி என்றும் கொண்டாடி வருகிறோம்.

source : Dinamani