Nagaratharonline.com
 
திருமணத்தை ஏன் பதிவு செய்யணும் ?  Mar 8, 10
 
இந்து மத சம்பிரதாயப்படி நடக்கும் திருமணம், கோயில்களில் வைத்து நடக்கும் திருமணம், சுயமரியாதைத் திருமணம், சிறப்பு திருமண சட்டத்தின் படி நடக்கும் திருமணம், கிறிஸ்தவ, இஸ்லாமிய, பார்சி முறைப்படி நடக்கும் திருமணங்கள் என்று பல வகை உண்டு. ஆனால், சமீபகால மாக, காதலர்கள் வீட்டை விட்டு ஓடி வந்து காவல் நிலையங்களில் தஞ்சம் அடைந்துகொள்ள, அங்கிருக் கும் காவல் அதிகாரியே அவர் களது திருமணத்தை நடத்தி வைக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

சிலர் சாட்சிகள் யாருமின்றி கோயில் களில் திருமணம் செய்து கொள்கிறார்கள்; இதுபோல இன்னும் சில சூழ்நிலைகளில் நடக்கும் திருமணங்களில் கணவன் - மனைவி இருவருக்குள் பின்னால் பிரச்னை என்று வந்தால், அப்போது திருமணம் நடந்தது என்பதற்கே சட்டபூர்வ மான சாட்சிகள் ஏதுமில்லாது போய்விடக் கூடும்.

இன்னொரு பக்கம், இன்று ஏராளமான வர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் என்று பல்வேறு அயல்நாடுகளுக்கும் பணி நிமித்தம் செல்ல வேண்டியிருக்கிறது. அதற்காக பாஸ் போர்ட்டுக்கும், விசாவுக்கும் விண்ணப்பிக் கும்போது, இவர் இன்னாருடைய கணவர் அல்லது மனைவி என்பதற்கான ஆதாரத் தைக் காட்ட வேண்டியது அவசியமா கிறது. திருமண அழைப்பிதழே இதற்குப் போதுமானது என்றாலும், திருமணத்தை சட்டப்படி பதிவு செய்து, அதற் குரிய பதிவாளர் வழங்கும் சான்றிதழ் வாங்கி வைத்துக் கொண்டால் இன்னும் பாதுகாப்பு.

source : Mangaiyar Malar