|
நாட்டரசன்கோட்டையில் 1009 கலசாபிஷேகம் Jul 13, 15 |
|
நாட்டரசன்கோட்டை சிவகாமி உடனுறை கரிகால சோழீஸ்வரர் கோயிலில் உலக நன்மை மற்றும் மழை வேண்டி திங்கள்கிழமை 1009 கலசாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஜூலை 11 ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாலை காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தன. திங்கள்கிழமை (ஜூலை 13) உலக நன்மை மற்றும் மழை வேண்டி 1009 கலசாபிஷேகம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, ஆலய கண்காணிப்பாளர் கணபதிராமன், கௌரவ கண்காணிப்பாளர் லெட்சுமணன் மற்றும் நகரத்தார் செய்திருந்தனர். |
|
|
|
|
|