Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரியில் பொதுமக்கள் மறியல்  Jul 20, 15
 
மேலைச்சிவபுரியில் குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து, பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலைச்சிவபுரி ஊராட்சி 4-வது வார்டில் கடந்த மூன்று நாள்களாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் திருமயம் தொகுதி செயலர் ம. முத்துராமன் தலைமையில், பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொன்னமராவதி காவல் உதவி ஆய்வாளர் எஸ். வீரபாண்டியன், துணை ஆணையர் தங்கராசு, மேலைச்சிவபுரி ஊராட்சித் தலைவர் பழனியப்பா பெரியகருப்பா ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர் பணிக்கு ஆள் இல்லாததால் குடிநீர் விநியோகம் சரிவர செய்ய முடியவில்லை எனவும், உடனடியாக குடிநீர் விநியோகம் தடைபடாமல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டதன் காரணமாக மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.