Nagaratharonline.com
 
NEWS REPORT: 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பவுன் தங்கம் ரூ.18,864-க்கு விற்பனை:  Jul 23, 15
 
கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.18,864 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே சரிவடைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவுக்கு இன்று விலை குறைந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூ.2,385-க்கும் பவுன் ரூ.19,080-க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று காலையில் கிராமுக்கு ரூ.22 குறைந்து ரூ.2,363 ஆகவும் பவுன் ரூ.18,904 ஆகவும் குறைந்தது. மாலையில் இது மேலும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.2,358 ஆகவும் பவுன் ரூ.18,864 ஆகவும் இருந்தது.