Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் தியாகராஜ ஆராதனை விழா  Mar 9, 10
 
பொன்னமராவதி : பொன்னமராவதி வலையப்பட்டி கோவில் நகர விடுதியில் ஸத்குரு தியாகராஜ சுவாமிகள் 18ம் ஆண்டு ஆராதனை விழா தமிழிசை விழா 2 நாட்கள் நடந்தது.6ம் தேதி காலை பொன்-புதுப்பட்டி சுப்பிரமணிய பாகவதர், சீதாராம அய்யர் ஆகியோர் தலைமையில் மூலங்குடி கண்ணன் உஞ்சவிருத்தியுடன் விழா தொடங்கியது. மாலை தியாகராஜ சுவாமிகள் பட ஊர்வலத்தை மிராஸ்ராஜா அம்பலக்காரர் தொடங்கி வைத்தார். உடுப்பி ஹோட்டல் ரங்கையா குத்துவிளக்கேற்றினார்.

7ம் தேதி குன்றக்குடி சுகுமாறன், காளீஸ்வரன் ஆகியோரின் நாதஸ்வரமும், தேவகோட்டை காளிதாஸ், கஜேந்திரனின் சிறப்பு தவிலுடன் 2ம் நாள் விழா தொடங்கியது. காலை சின்னமனூர் சகோதரிகள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் ஆராதனைகள் நடந்தது.பகல் 12 மணிக்கு புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவில் ராஜகோபாலன் புல்லாங்குழல் இசையுடன் பேரையூர் சின்னப்பா சிறப்பு தவிலும் நடந்தது. பகல் ஒரு மணிக்கு பொன்னமராவதி நித்யாராஜேஸ்வரி வீணை இசை நிகழ்ச்சி நடந்தது. 4 மணிக்கு அம்புக்கோவில் சுப்பையா, ராஜகோபால் நாதஸ்வரமும், பனையூர் ஜெயராமன், சின்னப்பா, கணபதி சிறப்பு தவிலும் நடந்தது.

மாலையில் பொன்-புதுப்பட்டி விஜயலட்சுமி கங்காதரனின் பாட்டும் நடந்தது. மாலை 6 மணிக்கு ராமலட்சுமி, வைஷ்ணவி, அஜந்தா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. மாலையில் சிவகங்கை கணேஷ் கார்த்திக் பாட்டும், கணேஷ் கந்தா வயலினும், புதுக்கோட்டை ராஜா மிருதங்கமும் நடந்தது. இரவு பொன்னமராவதி நித்யா ராஜேஸ்வரியின் பரதநாட்டியம் நடந்தது. தொடர்ந்து மன்னார்குடி சங்கரநாராயணன், வெங்கடேசன் நாதஸ்வரமும், வாசுதேவன், கல்யாணசுந்தரம் சிறப்பு தவிலும் நடந்தது. இரவு 12 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவம் நடந்தது.விழா ஏற்பாடுகளை தியாகராஜ ஆராதனை விழாக்குழுத்தலைவர் உடுப்பி மணிகண்டன், செயலாளர் வலையப்பட்டி கதிரேசன், பொருளாளர் சுந்தரம், துணை செயலாளர்கள் வெங்கடாசலம் உட்பட பலர் செய்திருந்தனர்.

Source:Dinamalar