Nagaratharonline.com
 
காரைக்குடி : முத்துமாரியம்மன் கோயில் கொடியேற்றம்  Mar 10, 10
 
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் மாசி, பங்குனி பால்குட உற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் காலை கொடியேற்றம், அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டனர். வரும் 16ம் தேதி முளைப்பாரி, மறுநாள் பால்குடம், காவடி, பூக்குழி இறங்குதல், 19 ம் தேதி சந்தனக்காப்பு அலங் காரமும் நடக்கின்றன. பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
பக்தர்கள் அவதி: சிறப்பு தரிசன கட்டணமாக 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. டிக்கெட் வாங்கும் பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதனால் அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் பக்தர்கள் இடையே தகராறு ஏற்படுகிறது. சிறப்பு தரிசன வரிசையை ஒழுங்குபடுத்த கோயில் நிர்வாகம் முன்வரவேண்டும்.
வரம்பு மீறும் வாகனங்கள்: கோயில் முன்பு கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் பால்குட பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. கோயில் அருகே வாகனங்களை அனுமதிக்க கூடாது. வரம்பு மீறும் நடைபாதை கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும். பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும்.

source : Dinamalar