Nagaratharonline.com
 
கொப்பனாபட்டியில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் ஒத்திவைப்பு  Aug 30, 15
 
கொப்பனாபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் கொப்பனாபட்டி கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில், விஜயா வங்கி, பள்ளி ஆகியவற்றின் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொன்னமராவதி வட்டாட்சியர் எஸ். கண்ணாகருப்பையா, டாஸ்மாக் கூடுதல் மேலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் டாஸ்மாக் கடையை அகற்றுவது குறித்து

10 நாள்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.