Nagaratharonline.com
 
நெற்குப்பை பகுதியில் பாலிதீன் பைகள் ஆய்வு  Sep 1, 15
 
நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள கடைகளில் அலுவலர்கள் பாலிதீன் பை ஒழிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

பிளாஸ்டிக் பொருள்கள் முதலான பொதுசுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 6 விதமான பொருள்களை பொதுமக்கள், வியாபாரிகள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. தடை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணிகளும், அதனைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சிமன்றத் தலைவர் சஞ்சீவி தலைமையில் வர்த்தக வணிகர்கள் ஒன்றிணைந்த கூட்டம் நடத்தப்பட்டு பாலிதீன் பை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து நெற்குப்பை பகுதிகளில் உள்ள வணிக வளாகக்கடைகள், ஒட்டல், காய்கறிகடைகள் போன்றவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டன.