Nagaratharonline.com
 
பொன்னமராவதியை நகராட்சியாக தரம் உயர்த்த வலியுறுத்தல்  Sep 30, 15
 
பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று வர்த்தகர் கழக பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பொன்னமராவதி அரசு பாப்பாயி மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, போதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும். பொன்னமராவதி அமரகண்டான் ஊரணி தூய்மை செய்யப்பட்டு, நடைபயிற்சி சாலை அமைக்கப்பட வேண்டும். இரவு நேரங்களில் பொன்னமராவதியிலிருந்து திருச்சி, மதுரை செல்ல அரசுப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். பொன்னமராவதியில் கிளை நீதிமன்றம் மற்றும் கிளை சிறைச் சாலை அமைக்கப்பட வேண்டும். பி.எஸ்.என்.எல். 3 ஜி இணையதள சேவை வழங்கப்பட வேண்டும். பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.