|
புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக். பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா Mar 14, 10 |
|
காரைக்குடி,மார்ச் 14: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக்.பள்ளியில் ரகுமத் பள்ளிக் கட்டடம், சரஸ்வதி ராஜகோபால் தகவல்-தொழில்நுட்ப மையம், லெட்சுமி அம்மாள் திறந்தவெளி கலையரங்கம் ஆகியவற்றின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் என்.சுந்தரம், திருவாடானை சட்டப் பேரவை உறுப்பினர் கேஆர்.ராமசாமி, தொழிலதிபர் பிஎல்.படிக்காசு, பள்ளித் தலைவர் எம்.பி.கிருஷ்ணன், பள்ளி பொருளாளர் எம்.முகம்மதுமீரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.முன்னதாக பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் ஆர்.சுவாமிநாதன் வரவேற்றார். மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
Source:Dinamani |
|
|
|
|
|