Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் புத்தகத் திருவிழா  Oct 5, 15
 
பொன்னமராவதி புதுப்பட்டியில் சென்னை ஆனந்த நிலையம், சென்னை ராமகிருஷ்ண மடம், விருத்தாச்சலம் சக்சஸ் புத்தக விற்பனை நிலையம், மதுரை சிக் சாப்ட் ஆகியன இணைந்து புத்தகத் திருவிழாவை நடத்தி வருகின்றன. கடந்த 2 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த கண்காட்சியை விஆர். காசிவிஸ்வநாதன்(ஐஎன்ஏ) மீனாட்சி தம்பதி தொடங்கி வைத்தனர்.

மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரித் தலைவர் சிங்காரம், செயலர் சாமிநாதன், கல்லூரி முதல்வர் க. கனகராசு, சதாசிவம், பெரியண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கண்காட்சியில் ஆன்மிகம், இலக்கியம், மருத்துவ நூல்கள், குழந்தைகள் பாடல்கள், மாணவர்களுக்கான பாடம் தொடர்பான டிவிடிகள் இடம் பெற்றுள்ளன. ஏற்பாடுகளை சென்னை ஆனந்த நிலையத் தலைவர் விஆர்கே. சிதம்பரம் செய்திருந்தார்.