|
கோயில்களை இணைத்து அரசு பஸ்:சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு Oct 5, 15 |
|
காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர்கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன், நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மனை தரிசிக்க, தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அரசு 2004ல் ஆன்மிக சுற்றுலாத்தலமாக அறிவித்தது. ஆனால் வளர்ச்சித் திட்டங்கள் செயல் படுத்தவில்லை. வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் ஆன்மிக சுற்றுலா தலங்களை இணைக்கும் விதமாக அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
பட்டுக்கோட்டை பெருமாள் கூறுகையில்,"" கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மனை அடிக்கடி தரிசித்து வருகிறேன். கொல்லங்குடியில் இறங்கி கோவிலுக்கு ஆட்டோவிற்கு 40 ரூபாய் கொடுத்து செல்லவேண்டியுள்ளது, கூடுதல் செலவு ஆகிறது.
பொருளாதார வசதி இல்லாதவர்கள் 2கி.மீ., தூரம் நடந்தே சென்றுவருகிறார்கள். பக்தர்கள் பயனடையும் வகையில் மாவட்ட நிர்வாகம் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் ,'' என்றார். |
|
|
|
|
|