Nagaratharonline.com
 
அக்டோபர் 11-இல் மீண்டும் வாக்காளர் சிறப்பு முகாம்  Oct 6, 15
 
வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) மீண்டும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:

திருத்தம் பணி மேற்கொள்வதற்காக மீண்டும் ஒரு வாய்ப்பாக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
5-இல் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எனவே, பெயர் சேர்ப்பு, நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்காக அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நவம்பர் 24-க்குள் இறுதி செய்யப்படும்.
இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
எனவே, வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை சரிபார்த்துக் கொள்வது அவசியம் என்றார் சந்தீப் சக்சேனா.