Nagaratharonline.com
 
காரைக்குடி மானாமதுரை பயணிகள் ரயில்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாற்காலிக ரத்து  Oct 9, 15
 
சனி, ஞாயிறு கிழமைகளில் திருச்சியிலிருந்து காரைக்குடி மற்றும் மானாமதுரை இடையை இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில்கள் 4 தாற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து ரயில்வே கோட்ட அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மதுரை ரயில்வே கோட்டப்பகுதிகளில் தண்டவாளம், சிறு சிறு ரயில்வே பாலங்கள், மற்றும் சிக்னப் பாயிண்டுகள் பராமரிப்புப் பணி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளன. இதனையடுத்து ரயில் போக்குவரத்தில் தாற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

பணி முடியும் வரை அதாவது 2016 ஜனவரி மாதம் 3-ம் தேதி வரையுள்ள சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சியிலிருந்து காரைக்குடி மற்றும் மானா மதுரை இடையே இயக்கப்படும் 4 பயணிகள் ரயில்கள் தாற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. திருச்சியிலிருந்து காரைக்குடி செல்லும் பயணிகள் ரயில் சனிக்கிழமைகளிலும், திருச்சி -மானாமதுரை மற்றும் மானாமதுரை - திருச்சி மற்றும் காரைக்குடி-திருச்சி பயணிகள் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தாற்காலிகமாக ரத்துசெய்யப்படுகின்றன. இந்த நடைமுறை ஜனவரி 3-ம் தேதிவரை அமலில் இருக்கும். என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.