|
இரட்டை அகல ரயில் பாதை பணி முடிந்ததும் மதுரை- சென்னை பயண காலம் 1 மணி நேரம் குறையும்: கோட்ட மேலாளர் Oct 14, 15 |
|
விழுப்புரம்-திண்டுக்கல் இடையே அமைக்கப்பட்டு வரும் இரட்டை அகல ரயில் பாதை பணி முடிந்து பயன்பாட்டுக்கு வரும் போது மதுரை- சென்னை இடையேயான பயண காலம் 1 மணி நேரம் குறையும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சுனில்குமார் கார்க் தெரிவித்தார்.
திண்டுக்கல்- விழுப்புரம் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு வரும் இரட்டை அகல ரயில் பாதை பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 2016ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த பாதை பயன்பாட்டுக்கு வரும் போது, சென்னை- மதுரை இடையேயான பயணத்தில் ஒரு மணி நேரம் குறையும். |
|
|
|
|
|