|
துவரம் பருப்பு விலை உயர்வு: துவரம் பருப்பு ரூ.210, உளுந்து ரூ.170-க்கு விற்பனை Oct 17, 15 |
|
துவரம் பருப்பு விலை அதிகரித்துக் கொண்டு வருவதால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
துவரம் பருப்பு பற்றாக்குறையை அறிந்த வியாபாரிகள் பதுக்கி வைத்துள்ளதை விற்பனைக்கு கொண்டு வராமல் உள்ளனர். பருப்பு பற்றாக்குறையினால் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது,இதுகுறித்து கர்நாடக மாநில மொத்த விற்பனை அங்காடி உரிமையாளர் தெரிவித்தது: இந்தியாவில் துவரம் பருப்பு விளைச்சல் குறைந்து விட்டது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி காலதாமதம் ஆவது விலை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம். மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் துவரம் பருப்பு தரம் குறைந்தது. இந்தியாவில் விளையும் துவரம்பருப்பு தரமிக்கதாக இருக்கும். வரும் ஜனவரியில் தான் புதிய துவரம் பருப்பு விளைச்சல் மூலம் நமக்குக் கிடைக்கும். அதுவரை துவரம் பருப்பு விலை குறைய வாய்ப்பில்லை.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் தசரா பண்டிகை, ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவதால் பருப்புகளின் தேவை அதிகரித்துள்ளது.எனவே ஜனவரி மாதம் வரை பருப்புகளின் விலை குறைய வாய்ப்பு மிகவும் குறைவு. |
|
|
|
|
|