|
20 ஆண்டுகளுக்கு பிறகு விநியோகம்: புதிய ஒரு ரூபாய் நோட்டை பெற ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர் Oct 21, 15 |
|
|
|
20 ஆண்டுகளுக்குப் பிறகு அச்சடித்து விநியோகம் செய்யப் பட்ட ஒரு ரூபாய் நோட்டை பெற ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் ரிசர்வ் வங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கியில் தினமும் ஏராள மானோர் வந்து கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புது ரூபாய் நோட்டுகளையும், சில்லறைகளையும் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் ஒரு ரூபாய் நோட்டுகள் விநியோகிக் கப்படுகின்றன.
இந்த ரூபாய் நோட்டுகளை பெற நேற்று ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். கூட்டத்தை சமாளிக்க முடியாததால் ரூபாய் நோட்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலர் கூறிய தாவது:
ரிசர்வ் வங்கியில் கடந்த ஒருவார மாக புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன. இந்நிலையில், ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்வது இன்றே (நேற்று) கடைசி நாள் என சிலர் புரளி கிளப்பியுள்ளனர். அத்துடன், ஒரு ரூபாய் நோட்டுகட்டை சவுகார்பேட்டையில் உள்ள வணிகர்களிடம் கொண்டு போய் கொடுத்தால் அவர்கள் 500 ரூபாய் கொடுப்பதாகவும் புரளி கிளம்பியது.
இதனால் ஏராளமானோர் ஒரே சமயத்தில் ரிசர்வ் வங்கியில் குவிந்தனர். கூட்டத்தை சமாளிக்க முடியாததால் ரூபாய் விநியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. மேலும், காவல்துறையினர் வந்து கூட்டத்தைக் கலைத்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர். |
|
|
|
|
|