Nagaratharonline.com
 
திருப்புத்தூர் பஸ் ஸ்டாண்டில் நடமாடும் வியாபாரிகளால் தொல்லை  Oct 21, 15
 
திருப்புத்தூர் பஸ் ஸ்டாண்டில் நடமாடும் வியாபாரிகளால் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது.திருப்புத்தூர் பஸ் ஸ்டாண்டில்பஸ்கள் வந்து நின்றதும் நடமாடும் வியா பாரிகள் முற்றுகையிட்டு பஸ்களில் ஏறி விடுகின்றனர். பயணிகள் செல்லும் பாதையில் நின்று வியாபாரம் செய்வதால் பயணிகள் இருக்கைக்கு சென்று அமர முடியாமல் தவிக்கின்றனர்.
குறிப்பாக பெண்கள்,முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். கண்டக்டர்,டிரைவர்கள் எச்சரிக்கையையும் இவர்கள் பொருட்படுத்துவது இல்லை.

முன்பு ஜன்னல் வழியாக வியாபாரம் செய்தவர்கள் தற்போது பஸ்சில் ஏறி வியாபாரம் செய்வதால் பயணிகள் தொல்லைக்குள்ளாகி வருகின்றனர். இவர்கள் பஸ்சில் ஏறி வியாபாரம் செய்வதைத் தடுக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.