Nagaratharonline.com
 
தேவகோட்டை நகர சிவன் கோயிலில் கந்த சஷ்டி விழா நவ.12ல் துவக்கம்  Nov 10, 15
 
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தேவகோட்டை நகர சிவன் கோயிலில் நவ. 12 ல் பால தண்டாயுதபாணிக்கு காப்பு கட்டுதல் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. தினமும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்,இரவு சிறப்பு வாகனங்களில் முருகபெருமான் வீதி உலா நடைபெறுகிறது. 6ம் நாளான நவ. 17 ல் சூரசம்ஹாரம், நவ. 18 தெய்வானை கல்யாணம், நவ. 19ல் வள்ளி கல்யாணம் நடக்கவுள்ளது. கந்த சஷ்டி விழா கழக ஆண்டு விழாவான முத்தமிழ் விழா சிவன் கோயில் எதிரே உள்ள மைதானத்தில் நவ. 11ம் நாள் துவங்குகிறது.