Nagaratharonline.com
 
பலவான்குடியில் ஊரணியை காணவில்லை : கலெக்டரிடம் புகார்  Nov 23, 15
 
பலவான்குடியில் ஊரணியை காணவில்லை என கிராமத்தினர் கலெக்டரிடம் புகார் அளித்தனர். காரைக்குடி தாலுகா பலவான்குடி இந்திரா நகரில் 4.45 எக்டேர் பரப்பில் ஊரணி இருந்தது. இங்கு தினமும் சிலர் குளித்து வந்தனர். இந்நிலையில், சில ஆக்கிரமிப்பாளர்கள், ஊரணியை ஆக்கிரமித்துள்ளனர். ஊரணி ஆக்கிரமிப்பை அகற்றி, மீண்டும் மக்கள் குளிக்கும் வகையில் ஊரணியை புதுப்பித்து தரவேண்டும் என, மகளிர் மன்றம் மற்றும் கிராமத்தினர் கலெக்டர் மலர்விழியிடம் புகார் அளித்தனர்