|
டிச., 22 வரை அடையாள அட்டை இல்லாமல் ரயிலில் பயணம் செய்யலாம் Dec 9, 15 |
|
பயணிகளின் நலனை கருதி, சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களில், அவர்களை ஒரிஜினல் அடையாள அட்டை காட்டும்படி கேட்க வேண்டாம் என, டிக்கெட் பரிசோதர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. டிச., 22 வரை இந்த வசதி அமலில் இருக்கும்' என, தெற்கு ரயில்வே முதன்மை வர்த்தக மேலாளர், டிக்கெட் பரிசோதகர் பிரிவுக்கு, சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இது குறித்து, டிக்கெட் பரிசோதகர் ஒருவர் கூறுகையில், 'ரயில் பயணத்தின் போது, ஒரிஜினல் அடையாள அட்டை இல்லாமல் நகல் இருந்தால் கூட அனுமதிப்போம். இனிமேல், அடையாள அட்டையின் நகல் இல்லாவிட்டாலும் அனுமதிப்போம்' என்றார்.
டிக்கெட் கட்டணம்: கன மழையால், தெற்கு ரயில்வே சார்பில், 561 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த ரயில்களுக்கு கவுன்டர்களில் முன்பதிவு செய்தவர்கள் பயண கட்டணத்தை திரும்ப பெற்று வருகின்றனர். பயண தேதியில் இருந்து, மூன்று நாட்களுக்குள் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். டிச., 5ல் பயணிக்க வேண்டியவர்கள் இன்றும்; டிச.,6ல் பயணிக்க வேண்டியவர்கள் நாளை வரை, ரயில் நிலைய கவுன்டர்களில், கட்டணத்தை திரும்ப பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
|
|
|
|
|