Nagaratharonline.com
 
திருக்கோஷ்டியூரில் வைகுண்ட ஏகாதசி டிச.21ல் சொர்க்கவாசல்  Dec 15, 15
 
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு டிச.21 இரவில் சொர்க்க வாசல் திறக்கப் படுகிறது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் 21 நாட்கள் நடைபெறும். டிச.12ல் காலை பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளி காப்புக்கட்டப்பட்டு, பகல் பத்து உற்சவம் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலையில் பெருமாள், ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளி, ஆழ்வாருக்கு மரியாதை நடைபெறும். பத்தாம் திருநாளன்று பெருமாள் இரவு 7 மணிக்கு மோகனா அலங்காரத்தில் ஆண்டாள் சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

டிச.21ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 10 மணிக்கு திருமாமணி மண்டபத்தில், உற்சவர் சயன கோலத்தில் காட்சி தருவார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அலங்காரம் நடைபெறும். பின்னர் இரவு 7 மணிக்கு ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்து, இரவு 10.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் நம்மாழ்வாருக்கு காட்சி தருவார்.