Nagaratharonline.com
 
B.E பட்டதாரிகளுக்கு NLC நிறுவனத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு  Dec 26, 15
 
நெய்வேலியில் செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறுவமான NLC நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 100 நிர்வாக பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக். முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Executive Trainee (Mechanical) - 50

பணி: Executive Trainee (Electrical) - 15

பணி: Executive Trainee (Electrical) -05

பணி: Executive Trainee (Civil) - 10

பணி: Executive Trainee (Control & Instrumentation) - 05

பணி: Executive Trainee (Mining) - 10

பணி: Executive Trainee (Computer) - 05

தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், சிவில். Instrumentation, Electronics & Instrumentation,Instrumentation and Control, கம்ப்யூட்டர், மைனிங், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் பொது பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களுடனும்,

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500.

வயது வரம்பு: 1.12.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைனில் செலுத்தவும்.

தேர்வு செய்யப்படும் முறை: கேட்-2016 தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2016.