|
NEWS REPORT: "கொடுப்பது குறையாமலும், கொள்வது மிகாமலும் செய்வதுதான் வணிகம்' : கோவிலூர் மடாதிபதி மெய்யப்ப ஞான Dec 28, 15 |
|
கொடுப்பது குறையாமலும், கொள்வது மிகாமலும் செய்வதுதான் வணிகம் என்றார் கோவிலூர் மடாதிபதி மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள்.
புதுக்கோட்டை ஜெஜெ. கலை, அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நகரத்தார் மாநாட்டில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:
அந்தக்காலத்திலேயே அச்சம் தவிர்த்து பாய்மரக் கப்பலில் சென்று வணிகம் செய்தவர்கள் நகரத்தார். அதனால், அன்பு, குணம், பாசத்துக்குக் கட்டுப்பட வேண்டுமே தவிர, எதற்கும் அஞ்சக்கூடாது. பாரம்பரியக் குணங்களையும் இழக்கக் கூடாது. கொடுப்பது குறையாமலும், கொள்வது மிகாலும் செய்வதுதான் வணிகம் என்ற கொள்கையை நகரத்தார் என்றும் விட்டுவிடக்கூடாது. வேலைக்குச் சென்றால் தர்மம் செய்ய இயலாது என்ற காரணத்தால்தான் நகரத்தார் தொழில் செய்வதற்கே முன்னுரிமை அளிப்பது தொடர்கிறது.
இதை இன்றைய இளைஞர்களும் பின்பற்றி தொழில்செய்ய முன்வர வேண்டும். அதற்கு மூத்தவர்கள் தாங்கள் செய்யும் தொழில், அறிந்த தொழில் ஆகியவற்றின் நுணுக்கங்களை சொல்லித்தர வேண்டும். இளைஞர்களும் மூத்தவர்களின் வழிகாட்டுதலை ஏற்று நடக்க வேண்டும். முடிந்தவர்கள் வளர்ச்சிப் பணிகளுக்கு பொருளுதவி செய்ய வேண்டும். முடியாதவர்கள் தங்கள் உழைப்பையும், அறிவையும் கொடுக்க வேண்டும் என்றார். |
|
|
|
|
|